Friday, October 3, 2008
பாண்டி விளையாடு பாப்பா
சரியா தப்பா எனக் கேட்டு
சரியாகவே
தாண்டி தாண்டி
பாண்டி விளையாடும்,
பத்து வயதில் 'உக்கார்ந்து'
குழந்தை பருவத்தைத் தொலைத்து
'பெரியவள்' ஆகிப்போன
பட்டணத்துப் பாப்பாக்களை
விளையாடத் தடைவிதித்து
வீட்டுக்குள் உக்காரவைக்கும்
உலகில் எல்லாம் தெரிந்த
உள்ளம் உள்ளவர்களுக்கு.,
உங்களுக்குத் தெரியுமா?
'அந்த நாள்' உபாதைகளை
அடியோடு போக்கிடவே நம்
முன்னோர்கள் கண்ட
முழுத்தீர்வு இந்த
விளையாட்டோடு சேர்ந்த
வினை தீர்க்கும் மருந்து
குழந்தை முதல் இதை
தொடர்ந்து வந்தால்
தொடராது அந்தநாள்
உபாதைகள் எதுவும்
உணர்ந்து கொள் உடனே,
தொடரச் சொல் அதனை.
Labels:
உண்மை
Subscribe to:
Posts (Atom)