Saturday, February 7, 2009

ஆமை புகுந்த வீடு உருப்படாது....


இன்றைய நிலவரம்:
இந்த பழமொழியைச் சொல்லியே உலகில் அதிக நாள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆமையை ராசி இல்லாத மிருகத்தின் அடையாளமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது முன்னேற்றத்தை அது தடுப்பதாக பழி சுமத்திக் கொண்டிருக்கிறோம்.

முன்னோர் சொன்னது:
கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்

ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம் நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த வேகத்தில் வரும் ஆமை வீட்டின் சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின் வழியே முற்றம் கடந்து,திண்ணை தாண்டி, படியில் ஏறி, வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங்கள். அவ்வளவு நேரம் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில் உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல் கதவு திறந்தும் கிடந்தால் அந்தவீடு சிறக்க எந்த வகையிலாவது வாய்ப்பு உண்டா என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

நீதி:
விலங்குகளின் மேல் பழி போடாமல்
நம்மைத் திருத்திக் கொண்டாலே நன்மை பிறக்கும்

5 comments:

பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) said...

துரை அவர்களே!

மிகச் சரியாகச் சொன்னீர்கள். விலங்குகளின் மேல் பழிபோடுவதே நமது சமுதாயம். எனது கருத்தில் 'ஆம்பி பூத்த வீடு உருப்படாது' என்பதே சரியான ப்ழமொழி ஆகும். ஆம்பி என்றால் காளான். எனது வலைப்பூவில் http://thiruththam.blogspot.com இது போல நிறைய பார்க்கலாம்.

பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) said...

துரை அவர்களே! இல்லாமை என்பது முதலில் ஒரு எதிர்மறைச் சொல் ஆகும். அது ஒன்று இரண்டல்ல. மிகப் பல. அன்றியும் நல்ல விசயங்களைக் குறிக்கும் (கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, எள்ளாமை முதலியன)ஆமைகளும், தீயவற்றைக் குறிக்கும் (இன்னாமை, கல்லாமை, தீண்டாமை முதலான)ஆமைகளும் உண்டு. இப்படி இருக்க நாம் நமது வசதிக்கேற்ப ஆமைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பொருள் கொள்வது ஏற்புடையதா என்று நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

kankaatchi.blogspot.com said...

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழி என் வந்தது.?

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது உலக வழக்கில் இருக்கும் ஒரு பழமொழி .

உலகில் எத்தனையோ பழமொழிகள் அதன் உண்மை தன்மையை இழந்து வழக்கத்தில் உள்ளதைபோல இந்த பழமொழியும் ஒன்று

. இந்த இடத்தில் வீடு என்பதை மனிதனின் மனம் பொருள் கொள்ள வேண்டும்

.அது சரி ஏன் ஆமை புகுந்த வீடு உருப்படாது ?

வீடு உருப்படுவதர்க்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு என்று யாரும் சிந்திப்பதில்லை

.முதலில் வழக்கில் உள்ள மொழியின் பொருளை பார்ப்போம் .

ஆமை என்றால் அறியாமை , பொறாமை என்று கொள்ள வேண்டும்

மக்கள் அதை வசதியாக மறந்து விட்டு அப்பாவி பிராணியான ஆமையை கண்டவுடன் அதை கொல்வதும் அதன் இறைச்சியை உண்பதும் செய்கின்றனர் .

ஆனால் அதன் உயரிய குணங்களை மனிதர்கள் கைகொண்டால் பல நூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ முடியும் என்று பல பேருக்கு தெரியாது.

அதன் இதய துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் பல நூறு ஆண்டுகள் வாழ்கிறது.அதுபோல மனிதனும் உணர்ச்சி வசப்படாமல் தன் மூச்சினை கட்டுபடுத்தி இதய துடிப்பின் வேகத்தை குறைத்தால் அவனும் நீண்ட நாள் வாழ இயலும் என்பதை பல சித்த புருஷர்கள் நிருபித்து வாழ்ந்து காட்டி உள்ளார்கள்....

தன் உறுதியான மேல் ஓட்டுக்குள் தன் வாய் மற்றும் நான்கு கால்களை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துகொள்வதைபோல் மனிதனும் தன்னுடைய ஐம்புலன்களை வெளியே செல்லாமல் அடக்கி கட்டுபடுத்தினால் அவன் யோக மார்க்கத்தில் முன்னேற முடியும் என்பதற்க்கு உதாரணமாக ஆமையை தான் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

நிலைமை அப்படி இருக்க மக்கள் அமைதியான இந்த பிராணி மீது களங்கம் சுமத்தி அதை துன்புறுத்துவது அவர்களின் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.

ஒரு மனிதனை அழிவு பாதையில் கொண்டு செல்வது பொறாமை என்ற ஆமையே.இந்த கெட்ட குணம் ஒன்று இருந்தால் போதும் மற்ற அனைத்து தீய குணங்களும் தானாகவே அவனிடம் வந்து சேர்ந்து விடும். பிறகு அவனும் உருப்படமாட்டான் , மற்றவரையும் உருப்படவிடமாட்டான். .அது மனத்தில் தோன்றியவுடன் அவன் நேர்மையாக சிந்திக்கும் பண்பை இழந்துவிடுகின்றான் .அவனின் தன்னம்பிக்கை போய்விடுகிறது . தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருந்தால் தானும் அதை குறுக்கு வழியில் பெற முனைகின்றான் .குறுக்கே வருகின்றவர்களை எல்லாம் வெறுக்கின்றான் ,அவர்களை அழிக்கவும் செய்கின்றான். முடிவில் அவனும் அழிந்து போகின்றான் .

எனவேதான் பொறாமை குணத்தை திருவள்ளுவர் அழுக்காறு என்று குறிப்பிடுகின்றார் .

எனவே உருப்படாமல் போவதற்கு ஆமை என்ற ஜந்து காரணமல்ல பொறாமை என்னும் தீய குணமே காரணம் என்பதை அறிந்துகொண்டு அந்த தீய குணத்திலிருந்து நம்மை விடுவித்துகொண்டால் நன்மைகளை அடையலாம்.என்பதே உண்மை

kankaatchi.blogspot.com said...

பிளஸ் டூ தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிக்க மூவாயிரம் பறக்கும் படைகள் தயார்-தினத்தந்தி செய்தி.
எதற்கு காப்பி அடிப்பதை தடை செய்ய வேண்டும்?
காப்பி அடிக்கிறவர்கள் அடித்துவிட்டு போகட்டும்
வினா தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு படித்ததை புரிந்துகொண்டு தேர்வை எழுதியவனுக்கும் புத்தகத்தை அப்படியே பார்த்து வாந்தி எடுத்தவனுக்கும் வேறுபாடு காண தெரியாதா ?
அப்படி பார்த்து படித்ததை புரிந்துகொண்டு விடையளித்தவனை தேர்வு பெற செய்யட்டும்
அப்படியே வாந்தி எடுத்தவனுக்கு மிக குறைந்த மதிப்பெண் வழங்கட்டும்.
இதை அரசு வெளிப்படையாக அறிவித்துவிடலாம்
அவ்வாறு செய்துவிட்டால் இன்று பல இடங்களின் ஆசிரியர்களை மாணவர்கள் விரோதம் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குவதும்,கொலை செய்வதும், காப்பியடிப்பதை தடை செய்ய அரசு லட்சகணக்கில் பொதுநிதியை வீணடிப்பதும் தவிர்க்கலாம்.
அதற்க்கு வீணடிக்கும் தொகையை கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க செலவிட்டால் நாடு நன்றாக இருக்கும்
இந்த பிரச்சினையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் நிச்சயம் நல்ல விளைவுகள் நிகழும்
கல்வியாளர்களும், சமுக ஆர்வலர்களும் அரசும் சிந்திப்பார்களா?