Friday, April 24, 2009

அதுக்குள்ள வந்தாச்சா அட்சய திரிதியை...



அதுக்குள்ள வந்துட்டுதே !
அதுக்குள்ள வந்துட்டுதே !!

அவசரமா போகணுமே
அடகுவேற வைக்கணுமே
காட்டுவேலய முடிச்சுட்டு
கடவீதிக்கு ஓடணுமே

மவராசன் டீவிப் பொட்டியில
மருகி உருகி சொல்லுதானே
தங்கம் வாங்கி சேத்துவச்சா
தங்கி பெருகிப் போயிருமாமே

போன வருசம் வந்த
அச்சய திரிதியைக்கு வாங்குன
ஆறுகிராம் கம்மல கழட்டி
அடகு வச்சே தீரணுமே

இந்த அச்சய திரிதியைக்கு
இருக்குற காச வச்சு
மூணுகிராமுல முழுசா ஒரு
மூக்குத்தியாவது வாங்கணுமே

இருட்டுக்குள்ள போகணுமே
இன்னைக்கு எப்படியும் கெடைக்கணுமே
எங்கபோயி காசுகேக்க
எவகிட்டப்போயி அடகு வைக்க

ஆறு கிராமு வாங்கி வைச்சா
நூறா ஆயிருமுன்னு சொன்னானே ?
மூணு வாங்குறதுக்குள்ளேயே
மூச்சு முட்டீரும் போலிருக்கே !

எனக்கு ஒன்னுமே புரியலியே !
என்ன செய்யனுமுன்னும் தெரியலியே !!

5 comments:

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
சங்கர்
shankarp071@gmail.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

வாழ்த்துக்கள் துரை
அற்புதம்
நட்புடன் இளங்கோவன்

Unknown said...

உட்காந்து யோசிப்பீங்களோ?

Anonymous said...

தமிழரைப் பிடித்த சாபங்களுள் ஒன்று தங்கத்திற்குத் தரும் மதிப்பு. அட்சய திதிதையில் தங்கம் வாங்கினால் நல்லது என்பது வாஸ்து வைப்போல் ஒரு கட்டுக் கதைதான். வலுவான உல்லம் இருக்குமிடத்தில் சஞ்சலத்திற்கு இடம் இல்லை. சஞ்சலமில்லா இடத்த்தில் கவைக்கும் இடமில்லை. அவரவருக்குகு அவரவரர்தான் கடவுள் இந்த உண்மையைப் புரிந்து விட்டால் கோவில் குளம் செல்லத் தேவை இல்லை,