Friday, January 30, 2009

களவும் கற்று மற...!!



நீதிமன்றம்.
தீர்ப்பு நேரம்.
குற்றவாளிக் கூண்டில் திருடன்.
நீதிபதி :"கடைசியாக எதும் சொல்ல விரும்புகிறாயா?"
குற்றவாளி :
"ஆமாம் அய்யா,பெரியவங்களே சொல்லி இருக்காங்க 'களவும் கத்து மற'ன்னு .அதலானதான் செஞ்சுபுட்டேன்.
இனிமே திருட மாட்டேன்,இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுருங்கய்யா"

நீதிபதி குழம்பிப் போகிறார்
'இப்படி ஒரு பழமொழி எப்படி வந்தது?
எதற்காக வந்தது?
எல்லா கலைகளையும் கற்றுக்கொள் என்று அறிவுறுத்த அப்படி சொல்லி இருப்பார்களா? முன்னோர் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டாமா?'

விடை தெரியவில்லை.குழப்பம் நீடிக்கிறது

இன்றைய நிலவரம் :-
எல்லாதரப்பினரையும் குழப்பும் வண்ணம் புரையோடிப்போய் கிடக்கிறது அந்தப் பழமொழி

உண்மை நிலவரம் :-
"களவும் கத்தும் மற"என்பது தான் அந்த உண்மையான பழமொழி
திருட்டையும் பொய்பேசுவதையும் (கத்து=பொய் சொல்லல்)மறக்க வேண்டுமமென்பதே இதன் பொருள்.
இது காலப்போக்கில் 'களவும் கற்று மற' என்று மருவி இருக்கிறது அல்லது மாற்றி இருக்கிறார்கள்

உணர்த்தும் உண்மை :- திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் காலப் போக்கில் உண்மை பொல மாறி விடுகிறது

2 comments:

பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) said...

துரை அவர்களே! கத்து என்னும் சொல்லுக்கு பொய் சொல்லுதல் என்ற பொருள் எங்கே வழக்கில் உள்ளது?. அதற்கு ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள். ஆதாரம் இல்லாமல் ஒரு கருத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

நன்றி.

Selvam abirami said...

///துரை அவர்களே! கத்து என்னும் சொல்லுக்கு பொய் சொல்லுதல் என்ற பொருள் எங்கே வழக்கில் உள்ளது?. அதற்கு ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள். ஆதாரம் இல்லாமல் ஒரு கருத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்.//

வழக்கில் உள்ளதாக தெரியவில்லை ஆனால் கத்து என்ற வார்த்தை உண்டு

கத்து –ன்னா பொய் சொல்றது –ன்னு நீ சொல்றதே பொய் அப்படின்னு நான் சொன்னா என்னா பண்ணுவே ?

திருவருட்பா எழுதிய ராமலிங்க சாமிகளையும் 3873 –வது பாவினையும் அதற்கு உரை எழுதிய அவ்வை துரைசாமிப்பிள்ளையையும் கூப்பிடுவேன் .
சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
கடவுளே கருணையங் கடலே
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
தனக்கறி வித்ததோர் தயையே
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை:
அம்பலத்தில் நடம் புரிகின்ற பரம் பொருளே! சித்தி வகைகள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தனே! ஞான நிலையமாகிய சிதம்பரத்தில் விளங்குகின்ற ஒளிப் பொருளே! சிறுமை யுடைய எனது பொய்ம்மைகளைப் போக்கி உண்மைக் கருத்துக்களே எய்துமாறு எனக்கு அருள்புரிந்த கடவுளே! கருணை மிகுதியால் கடல் போன்றவனே! சத்தெனப்படுகின்ற பொருள்கள் எல்லாம் சத்தாந்தன்மை யுடையவை என எனக்கு அறிவுறுத்தருளிய தயாகுருவே! என்னுடைய புதுமைப் புனைவுகள் அனைத்தையும் போக்கி மெய்ம்மைப் பொருள் எல்லாவற்றையும் காட்டி யருளுகின்ற பெருமானே, வணக்கம்.